விஜய்யின் அடுத்தப் படத்தில் நடிக்கிறேனா? - பிரபல நடிகரின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி

Mohan Vijay
By Petchi Avudaiappan Apr 20, 2022 08:38 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

விஜய் நடிக்கும் 66வது படத்தில் அவருக்கு அண்ணனாக தான் நடிக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு நடிகர் மோகன் விளக்கமளித்துள்ளார். 

 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே,, இயக்குநர் செல்வராகவன் உட்பல பலரும் நடித்துள்ள படம் “பீஸ்ட்”. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இதனைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளதாகவும், பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்காலிகமாக “தளபதி 66” என பெயரிடப்பட்டுள்ளது. 

இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக 1980-களில் முன்னணி கதாநாயகனாக கொடி கட்டி பறந்த நடிகர் மைக் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

15 வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு விலகிய மோகன் தற்போது இயக்குனர் விஜய் ஸ்ரீ சொன்ன ஹரா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்கவில்லை என மோகன் விளக்கமளித்துள்ளார். மேலும் ஹரா படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிப்பது குறித்து யோசிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.