நடிகை மீனா கர்ப்பம்? இணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் வீடியோ..!

Viral Actor Video Meena Pregnancy meenasagar16 நடிகைமீனா
By Thahir Apr 18, 2022 08:01 AM GMT
Report

தமிழ் சினிமாவின் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா.

இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரத்திற்கு பிறகு நடிகையாக தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். தென்னிந்திய சினிமா உலகின் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.

மீனா தமிழில் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,விஜயகாந்த்,அர்ஜுன், அஜித்,முரளி,சத்யராஜ்,சரத்குமார்,பாக்யராஜ் என பலருடன் நடித்துள்ளார்.

சினிமாவில் பிசியாக இருந்து வருகிறார் நடிகை மீனா.தற்போது நடிகை மீனா கர்ப்பிணி கோலத்தில் உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகை மீனா, நிறைய மாறிவிட்டது. இந்த கெட் அப் அணிவது அப்போது எளிதாக இருந்தது.

அதை மறைப்பதற்காக எப்பொழுதும் கனமான புடவைகளை அணிவது வழக்கம். ஆனால் இப்போது, எழும்பும் தோற்றத்திற்கும், உணர்விற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இயற்கையாகத் தோற்றமளிக்க வேண்டும் மற்றும் சிஃப்பான் புடவைகள் கூட அணியலாம் என பதிவிட்டுள்ளார்.