நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமானார்
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57.
நடிகர் மயில்சாமி காலமானார்
நேற்று இரவு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவரை பரிசோதித்ததில் அவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மயில்சாமி தொகுப்பாளராகவும் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
துாள், கில்லி, தேவதையை கண்டேன், வீரம் , திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1965 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்தார்.
திரையுலகினர் இரங்கல்
1980 ஆம் ஆண்டு சென்னை வந்த நடிகர் மயில்சாமி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதையடுத்து அவருக்கு பிரபல நடிகர்களான விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த மயில்சாமிக்கு நேற்று இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் போரூரில் உள்ள ராமச்சந்திர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
நடிகர் மயில்சாமி உயிரிழப்பால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.