நெஞ்சு வலியால் துடிதுடித்து உயிரிழந்த நடிகர் மயில்சாமி - திரைப்பிரபலங்கள் இரங்கல்
நடிகர் மயில்சாமி உயிரிழந்தது குறித்த தகவல் ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நெஞ்சு வலியால் துடிதுடித்த மயில்சாமி
பிரபல நடிகைச்சுவை நடிகரான மயில்சாமி உடல் நலக்குறைவால் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அவரின் மறைவு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிர சிவ பக்தரான 57 வயதான நடிகர் மயில்சாமி, சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார்.
சிவராத்திரி பூஜையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து உடனடியாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
சரத்குமார் இரங்கல்
மயில்சாமியின் மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சரத்குமார், “எனது அன்பு நண்பரும், மிகச்சிறந்த மனிதரும், தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமும், சிறந்த விரிவுரையாளருமான மயில்சாமி திடீர் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி பேரதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.