ஏமா ஏய்! இப்படி இருங்கள் - இளைஞர்களுக்கு மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இறுதி அறிவுரை!
மறைந்த நடிகர் மாரிமுத்து இளைஞர்கள் பற்றி பேசியுள்ளார்
நடிகர் மாரிமுத்து
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. 'இந்தாமா ஏய்' என்ற இவரின் ஒரு டயலாக் மிகவும் பிரபலம். இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
ட்ரெண்டிங் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும் இருந்துள்ளார். பரியேறும் பெருமாள் என்ற படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் மாரிமுத்து இன்று காலை திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.
இவரின் மறைவு ரசிகர்களையும், திரை பிரபலங்களையும், சீரியல் பிரபலங்களையும், சகா கலைஞர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அண்மையில் மாரிமுத்து ஒரு யூடியூப் சானெலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவரிடம் 'இந்த காலத்து இளைஞர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
பேட்டி
அதற்கு பதிலளித்த மாரிமுத்து "இளைஞர்களிடம் அடிப்படை ஒழுக்கம் இல்லை. இளைஞர்கள் என்றால் எல்லாரையும் நான் சொல்லவில்லை. பெரும்பாலும் 2 கிட்ஸ், அவர்களிடம் ஒரு அடிப்படை ஒழுக்கம் இல்லை. இதை எல்லாரையும் சேர்த்துதான் நான் சொல்கிறேன்.
ஒரு இடத்திற்கு போனால் செருப்பை கழட்டி வைக்க தெரியவில்லை. அவர்களின் பைக்கில் இண்டிகேட்டர் உடைந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. அதை ஒரு 170ரூபாய் கொடுத்து மாற்றத் தெரியவில்லை. வண்டி பார்க்கிங் சென்ஸ் யாரிடமும் இல்லை. போர போக்கில் அப்படியே நிறுத்தி விட்டுச் செல்கிறார்கள். அது மிகவும் தவறான குணம்.
பின்னர் ஒரு இடத்தில் இருக்கும்போது அந்த இடத்தை சுத்தமாக வைத்து கொள்வதில்லை. எல்லாப் பயலுகளும் நகத்தை வளர்த்து வைத்துக் கொள்கிறார்கள். நகம் வளர்த்த ஆண்களை பார்த்தால் எனக்கு கோவம் வரும். பெண்கள்தான் நகம் வளர்க்க வேண்டும், ஆண்கள் மீசையைத்தான் வளர்க்க வேண்டும். முடிவெட்டும் ஸ்டைல், ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இப்படி பல விஷயங்கள் இருக்கிறது.
இப்போது இதை சொல்வதால் என்னை கிழவன் என்று கூறுவார்கள், பழைய ஆளு இவன் சும்மா லூசு மாதிரி பேசுகிறான் என்று கூறுவார்கள்' என்று மாரிமுத்து பேசியுள்ளார்