ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த அவகாசம் கேட்ட மன்சூர் அலிகான் - அறிவுரை வழங்கிய நீதிபதி!

Tamil Cinema Tamil nadu Mansoor Ali Khan Tamil Actors Tamil Actress
By Jiyath Jan 19, 2024 07:02 AM GMT
Report

சர்ச்சை பேச்சு தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

சர்ச்சை பேச்சு  

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த அவகாசம் கேட்ட மன்சூர் அலிகான் - அறிவுரை வழங்கிய நீதிபதி! | Actor Mansoor Alikhan Trisha Case Update

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடிக்க, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து மன்சூர் அலிகான் மீது பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவிடம், மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரினார். த்ரிஷாவும் அவரை மன்னித்து விட்டதா தெரிவித்தார்.

இந்த விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவிக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், மூன்று பேரும் தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மன்சூர் அலிகான் அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

நீதிபதி அறிவுரை 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த அவகாசம் கேட்ட மன்சூர் அலிகான் - அறிவுரை வழங்கிய நீதிபதி! | Actor Mansoor Alikhan Trisha Case Update

மேலும், இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நிதி நெருக்கடியில் இருப்பதால் ரூ.1 லட்சம் செலுத்துவதற்கு 10 நாட்கள் மேலும் அவகாசம் வேண்டும் என்று மன்சூர் அலிகான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதி ஒருவரை பற்றி கருத்து தெரிவிக்கும் முன்பு அதனால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்து 10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.