மீன் விற்பனை செய்து வாக்கு சேகரித்த நடிகர் மன்சூர் அலிகான்
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. அதோடு நடிகர் மன்சூர் அலிகானும் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான், தன்னை ஒரு வேட்பாளர் என்று முன்னிலைபடுத்தி கொள்ளாமல், நானும் உங்களில் ஒருவன் என்பதை போல சர்வ சாதாரணமாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொண்டாமுத்தூர் தொகுதிகளிலும் வலம் வந்து கொண்டிருகின்றார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட மன்சூர் அலிகானின் பிரச்சாரம் அப்போதே கவனம் பெற்றிருந்தது.

மேலும் மக்களிடம் நேரடியாக சென்று பேசியும், அவர்களிடம் தேநீர் வாங்கி அருந்தியும் ஆதரவு திரட்டி வருகின்றார். இந்த நிலையில் ஞாயிற்றுகிழமை உக்கடம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் பகுதிக்கு சென்ற மன்சூர் அலிகான் மீன்களை வெட்டி தனக்கு ஆதரவு திரட்டினார். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது வாரமும், மீண்டும் உக்கடம் மீன் மார்க்கெட் பகுதிக்கு சென்ற வேட்பாளர் மன்சூர் அலிகான், மீன்மார்க்கேட் பகுதியில் மீன்களை, வியாபாரிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து வியாபாரிகளுக்கு உதவியாக மீன்களை 100 ருபாய், 200 ருபாய் என எலம் விட்டபடி, மக்களிடம் மீன்களை விற்பனை செய்து வாக்குகளை சேகரித்தார்.
மன்சூர் அலிகானின் பிரச்சாரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.