நடிகர் மனோ பாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை!

Tamil Cinema
By Sumathi Jan 26, 2023 12:13 PM GMT
Report

உடல் நலக் குறைவால் நடிகர் மனோ பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 மனோ பாலா

தமிழ் சினிமாவில் 80, 90 ஸ் காலகட்டத்தில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் இயக்குனர் மனோ பாலா. அதன்பின் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

நடிகர் மனோ பாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை! | Actor Mano Bala Recovering Well

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனோ பாலா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் நலக்குறைவு

இதனை தொடர்ந்து ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ஆஞ்சியோ சிகிச்சை பெற்று நலமாக இருக்கிறார், இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்று கூறியுள்ளார்.