முத்தக் காட்சி; 15 முறை டேக் -அப்போ கூட விடலையே.. நகுலை கலாய்த்த நடிகர்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகர் மணிகண்டன் பாய்ஸ் பட முத்த காட்சி குறித்து பேசியுள்ளார்.
நடிகர் மணிகண்டன்
அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா. இதில் நடிகர் நகுல் காதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த், ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம், ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு, படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.
முத்த காட்சி
இந்த விழாவில் பேசிய, பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் மணிகண்டன், பாய்ஸ் படத்தில் எனக்கும் நகுலுக்கும் எடுத்த முதல் காட்சியே முத்த காட்சிதான், அதுவும் சாதாரண முத்தம் இல்ல உதட்டோடு உதட்டில் கொடுக்கும் முத்தக்காட்சி.
அந்த காட்சி கிட்டத்தட்ட 15 டேக்கு மேல் போனது. ஷாட் நன்றாக வர வேண்டும் என்பதற்காக ஷங்கர் சார் மிகவும் மெனக்கெட்டார். ஆனாலும் அதை சகித்துக் கொண்டு, கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் நகுல் சிறப்பாக நடித்தார். அதை என்னால் மறக்கவே முடியாது எனத் தெரிவித்துள்ளார்.