Saturday, Jun 7, 2025

வயது முப்பு காரணமாக நடிகர் மம்மூட்டி தாயார் காலமானார்

Mammootty Death
By Thahir 2 years ago
Report

மலையாளம், தெலுங்கு, தமிழ்,கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள மம்முட்டியை கேரள ரசிகர்கள் மெகா ஸ்டார் என கொண்டாடி வருகின்றனர்.

மம்முட்டி தயார் காலமானார்

திரையுலகில் 50 ஆண்டுகளாக வெற்றிக்கொடியுடன் ஆட்சி செய்து வரும் மம்முட்டி 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மம்முட்டி ஜோதிகாவுடன் இணைந்து 'காதல் தி கோர்'என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மம்மூட்டியின் தாயார் பாத்திமா வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93.

வயது முப்பு காரணமாக நடிகர் மம்மூட்டி தாயார் காலமானார் | Actor Mammootty Passed Away

வயது முதிர்வின் காரணமாகவும் நோயால் பாதிக்கப்பட்டும் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

திரையுலகினர் இரங்கல்

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். பாத்திமாவின் மறைவையொட்டி மம்மூட்டிக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மம்மூட்டியின் மகன் பிரபல நடிகர் துல்கர் சல்மானுக்கும் திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் ஆறுதல் கூறிவருகிறார்கள். பாத்திமா இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு செம்பை பகுதியில் உள்ள முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.