இறந்த தன் தாயின் புகைப்படத்தை வெளியிட்டு நடிகர் மகேஷ் பாபு உருக்கம் - சோகத்தில் ரசிகர்கள்

Mahesh Babu
By Nandhini 4 மாதங்கள் முன்

நடிகர் மகேஷ்பாபு

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி இன்று காலை வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். இது திரையுலகினரையும், அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் ரமேஷ் பாபுவின் சகோதரர் உயிரிழந்தார். இந்த துக்கம் ஆராத நிலையில், தற்போது, அவரது தாயும், நடிகருமான கிருஷ்ணாவின் மனைவி இந்திரா தேவி இன்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார். இதனால், மகேஷ் பாபுவின் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

actor-mahesh-babu-mother-death

வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தன் அம்மாவின் பழைய புகைப்படத்தை வெளியிட்டு, அதில் 3 இதய வடிவிலான imageஐ குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.