தனது மகனின் கால்களை முத்தமிடும் நடிகர் மகத் - வைரலாகும் புகைப்படம்

baby photo viral actor mahath
By Anupriyamkumaresan Aug 22, 2021 04:55 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

அஜீத்தின் ‘மங்காத்தா’ படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் மகத், அதன்பிறகு ‘பிரியாணி’,‘வடகறி’,‘சென்னை 28 -2’,‘அன்பானவன் அடங்காதன் அசராதவன்’,‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’,‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தனது மகனின் கால்களை முத்தமிடும் நடிகர் மகத் - வைரலாகும் புகைப்படம் | Actor Mahat Baby Poto Viral

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்துக்கொண்டு ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ‘காதல் Condition apply’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

ஆர்.அரவிந்த் இயக்கியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதற்கிடையே மாடல் அழகியான பிராச்சி மிஸ்ராவை, காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

தனது மகனின் கால்களை முத்தமிடும் நடிகர் மகத் - வைரலாகும் புகைப்படம் | Actor Mahat Baby Poto Viral

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மகத், தனது கர்ப்பினி மனைவிக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் மகத் – பிராச்சி மிஸ்ரா தம்பதிக்கு கடந்த ஜுன் மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு அதியமான் ராகவேந்திரா என பெயர் வைத்து சமூக வலைத்தளத்தில் அதை அறிவித்திருந்தார்.

தனது மகனின் கால்களை முத்தமிடும் நடிகர் மகத் - வைரலாகும் புகைப்படம் | Actor Mahat Baby Poto Viral

இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதனையடுத்து நடிகர் மகத், தனது மகனை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அதில், மகன் அதியமானின் கால்களை முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தட்டி வருகின்றனர்.