திடீரென ரஜினிகாந்த் காலில் விழுந்த நடிகர் மாதவன் - வைரலாகும் புகைப்படம்..!

Madhavan Rajinikanth
By Thahir Jul 31, 2022 10:42 AM GMT
Report

ரக்கெட்ரி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் நடிகர் மாதவன் மற்றும் விஞ்ஞானி நம்பி நாராயனை உள்ளிட்ட இருவரையும் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

ஹிட்டான ராக்கெட்ரி திரைப்படம் 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மாதவன் இயக்கி நடித்த திரைப்படம் ராக்கெட்ரி. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

Rocketry

இந்த படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்திருந்தார். கடந்த ஜூலை 1-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிட்டது. வெளியானது முதல் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

பாராட்டிய ரஜினிகாந்த்

இந்த படத்தில் நடிகை சிம்ரன், சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் நடித்துள்ளனர். திரைப்படத்தை பார்த்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நம்பி நாராயணன் மற்றும் நடிகர் மாதவனை நேரில் அழைத்து பாராட்டினார்.

பின்னர் இருவருக்கும் ரஜினிகாந்த் சால்வை அணிவித்தார்.மாதவன் சால்வை அணிவித்த போது ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இது குறித்தான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.