பெண் இயக்குனரின் மனதை காயப்படுத்திய எம்.ஜி.ஆர்… - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்...!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். இவரின் புகழ் இன்றளவும் தமிழ் மக்களால் பாடிக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மனிதரா? என்று ஆச்சரியப்படுகிற அளவுக்கு மக்கள் திலகமாய் பல பணிகளை மக்களுக்கு செய்தார்.
பெண் இயக்குநரை கஷ்டப்படுத்திய எம்.ஜி.ஆர்
இயக்குநர் ஜெயதேவி “நலம் நலமறிய ஆவல்”, “விலாங்கு மீன்”, “விலங்கு”, “பாசம் ஒரு வேஷம்”, “பவர் ஆஃப் உமன்” போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
ஜெயதேவி ‘இதய வீணை’ என்ற படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்தபோது, குரூப் டான்சர்களில் ஒருவராக நடனமாடுவதற்கு ஜெயதேவிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை ஏற்று ஜெயதேவி ரொம்ப சந்தோஷமாக படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
அப்போது, படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடந்தது. அப்போது, படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தபோது, எம்.ஜி.ஆர் அமர்ந்திருந்த நாற்காலிக்கு அருகில் சென்று கீழே அமர்ந்துகொண்டு அவரை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
இப்படி ஒரு பெண் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை முதலில் வியப்பாக பார்த்த எம்.ஜி.ஆர் அதை கண்டுக்கொள்ள இல்லை. ஆனால், ஜெயதேவி அடுத்த 2 நாட்களும் படப்பிடிப்பு நடக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் எம்.ஜி.ஆரை பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார். ஒரு நாள் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தபோது, ஒரு பெண்மணி வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த பெண்மணியிடம் இருந்த வேர்க்கடலையை விலைக்கு வாங்கி, படக்குழுவினர் அனைவருக்கும் கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆனால், ஜெயதேவிக்கு மட்டும் கொடுக்கவில்லை. அதே போல், குரூப் டான்சர்கள் எல்லோருக்கும் தலா 100 ரூபாய் நோட்டை பரிசாக கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆனால் ஜெயதேவிக்கு மட்டும் கொடுக்கவில்லை.
இது ஜெயதேவியை சோகத்தில் ஆழ்த்தியது. அன்று இரவு முழுவதும் தூங்காமல் அழுதுகொண்டே இருந்துள்ளார். அதற்கு அடுத்த நாள் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றபோது ஜெயதேவியை அழைத்த மேனேஜர், டைரக்டர் உங்களை கிளம்பச் சொல்லிவிட்டார் என்று கூறி அவரை அனுப்பிவிட்டனராம். இந்த வேதனையில் ஸ்ரீதேவி கண்ணீரோ அங்கிருந்து சென்றாராம்.