நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் - கதறி அழுத நடிகர்
நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்.
கோட்டா சீனிவாச ராவ்
ஆந்திராவை சேர்ந்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தமிழ் தெலுங்கு உட்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். 85 வயதான அவர், 40 ஆண்டுகளாக 750க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
வில்லன் மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ள அவர், பத்மஸ்ரீ மற்றும் நந்தி விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
மேலும், 1999 ஆம் ஆண்டு பாஜக சார்பில் விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கதறி அழுத நடிகர்
2003 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். தொடர்ந்து குத்து, ஏய், திருப்பாச்சி, பரமசிவன், சத்யம், கோ, சாமி 2, காத்தாடி என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக சிலகாலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
அவரது மறைவிற்கு, திரையிதுறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
#Brahmanandam garu emotional words about #KotaSrinivasaRaoGaru pic.twitter.com/YEl9Fl1H0Q
— Telugu Funda (@TeluguFunda) July 13, 2025
கோட்டா சீனிவாச ராவ்வின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் பிரம்மானந்தம், அவரது இழப்பை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.