எனக்கு வேண்டாம்.. சிறந்த நடிகருக்கான விருதை நிராகரித்த நடிகர் சுதீப்- அதிர்ச்சி தகவல்!
சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை நடிகர் சுதீப் நிராகரித்துள்ளார்.
சிறந்த நடிகர்
மாநில அரசு வழங்கும் மாநில ஆண்டு திரைப்பட விருதுகளில் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருதுக்குக் கிச்சா சுதீபா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த விருதை ஏற்க மாட்டேன் என அபிநயா நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,’’ சிறந்த நடிகர் பிரிவின் கீழ் மாநில விருது பெற்றது உண்மையிலேயே ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், நான் பல ஆண்டுகளாக விருதுகளைப் பெறுவதை நிறுத்த முடிவு செய்துள்ளேன்.
நான் முழு மனதுடன் மதிக்க விரும்பும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த நேரத்தில் மாநில அரசிடம் விருதைப் பெற வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தை என்னை விடத் தகுதி வாய்ந்த பல நடிகர்கள் உள்ளனர்.
நடிகர் சுதீப்
இந்த விருதை நான் பெறுவதை விட அவர்களில் ஒருவர் அதைப் பெறுவதைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று கூறியுள்ளார். மேலும் மக்களை மகிழ்விப்பதில் எனது அர்ப்பணிப்பு என்று தெரிவித்த அவர், எப்போதுமே விருதுகளை எதிர்பார்ப்பது கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜூரியின் இந்த அங்கீகாரம் மட்டுமே நான் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார். எனது முடிவு ஏதேனும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால் மாநில அரசாங்கத்திடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் எனது விருப்பத்தை மதித்து நான் தேர்ந்தெடுத்த பாதையில் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.