10 நாளில் எதையும் சரிப்படுத்த முடியாது - விஜய் ஆட்சி குறித்து பாஜக நிர்வாகி குஷ்பு பேட்டி

Vijay Tamil nadu Kushboo TVK
By Vinoja May 26, 2026 09:25 AM GMT
Report

ஐந்து ஆண்டுகளில் வீணாக்கப்பட்டதை வெறும் பத்து நாட்களில் யாராலும் சரிசெய்ய முடியாது. முதல்வர் விஜய்க்கு கொஞ்சம் கால அசகாசம் தேவை இவர் அனைத்தையும் சரி செய்வார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு குறித்து பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை குஷ்பு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதல்வர் விஜயை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

10 நாளில் எதையும் சரிப்படுத்த முடியாது - விஜய் ஆட்சி குறித்து பாஜக நிர்வாகி குஷ்பு பேட்டி | Actor Khushbu Sundar Met Tamil Nadu Cm Vijay

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தொரிவித்துள்ளார்.இது தொடர்பில் குஷ்பு மேலும் தெரிவிக்கையில், 

விஜய் முதலமைச்சர் என்ற தனது புதிய பதவியில் இருப்பதைக் கண்டு "மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக" உணர்ந்ததாகக் கூறினார். தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒருவர் இப்போது மாநில அரசை வழிநடத்துவதைப் பார்ப்பது நம்ப முடியாததாக இருப்பதாகவும், தங்களது உரையாடலில் இருந்த அன்பையும் மரியாதையையும் அவர் வலியுறுத்தினார்.

10 நாளில் எதையும் சரிப்படுத்த முடியாது - விஜய் ஆட்சி குறித்து பாஜக நிர்வாகி குஷ்பு பேட்டி | Actor Khushbu Sundar Met Tamil Nadu Cm Vijay

இதன் போது விஜய் முதல்வராக பதவியேற்றிருப்தை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு குஷ்பு, நாட்டு மக்களிடையேயும் பார்க்கும் சந்தேஷத்தையும் ஏன், ஊடகத்துறையினராகிய உங்களின் முகத்தில் பார்க்கும் சந்தோஷத்தை பார்க்கும் போதே நன்றாக தான் போகின்றது என்பது தெரிகின்றது என குறிப்பிட்டார்.

மேலும், கடந்த சில தினங்களில் நடந்த சிறுமிகளின் பாலியல் ரீதியாக கொடுமைகள் மற்றும் கொலை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, திமுக கடந்த 5 ஆண்டுகளில் கெடுத்து வைத்த விடயங்களை வெறும் 10 நாட்களில் யாராலும் சரி செய்துவிட முடியாது. புதிதான பதிவியேற்றிருக்கும் முதல்வர் விஜய்க்கு சிறிது கால அவகாசம் தேவை... நிச்சயம் இவர் அனைத்தையும் சரி செய்வார் என்ற நம்பிக்கையிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், இப்போதைய சூழலில் நிதானம் காப்பது அவசியம் என்ற தொனியில் அவருடைய கருத்துக்கள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.