என்னோட நண்பர்கள் அப்படி; காசு இல்லாம கஷ்டப்பட்டேன் - கவின் எமோஷனல்!
தனது வாழ்க்கை அனுபவங்களை குறித்து பேசியுள்ளார் நடிகர் கவின் பேசியுள்ளார்.
நடிகர் கவின்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' என்ற சீரியல் நடித்து பிரபலமானவர் கவின். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கவினுக்கென தனி ரசிகர் கூட்டமே உருவானது.

மேலும், நட்புன்னா என்னன்னு தெரியுமா, லிப்ட், டாடா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஸ்டார் திரைப்படம் வரும் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
எமோஷனல்
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கவின், தனது வாழ்க்கை அனுபவங்களை குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது " எனக்கு கிடைத்த நண்பர்கள் மிகவும் நல்லவர்கள். சினிமா ஆர்வத்தில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த போது நண்பர்கள் தான் எனது அனைத்து செலவையும் பார்த்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் தனக்கு திருமணம் ஆகப் போகிறது. ஒரு 2 மாதங்கள் உன் செலவை நீ பார்த்துக்கோ என ஒரு நண்பன் சொன்னான். அப்போதுதான் அவனுடைய கஷ்டம் புரிந்தது. சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்" என கவின் எமோஷனலாக பேசியுள்ளார்.
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil