எனக்கும் குதிரைக்குமான காதல் : அனுபவம் சொன்ன வந்தியத்தேவன்

ponnienselvan actorkarthi
By Irumporai Apr 04, 2022 01:04 PM GMT
Report

நடிகர் கார்த்தி அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, சர்தார் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் குதிரையுடன் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தை போட்டுள்ள கார்த்தி குதிரையுடன் தனக்கு இருக்கும் காதல் மிகவும் அலாதியானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காஷ்மோரா படத்தில் தான் குதிரையேற்றத்தை கற்றதாகவும் தற்போது அது பொன்னியின் செல்வன் படத்தில் காதலுடன் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சந்தோஷத்தை தன்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள கார்த்தி.

குதிரை தன்னுடன் சேர்ந்து பயணித்ததையும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷாகவும் ப்ரெஷ்ஷாகவும் காணப்படுகிறார்.