சரக்கடித்துவிட்டு நடிகர் கார்த்திக் செய்த செயல்... - பதறி அடித்து ஓடி வந்த மனைவி...! - ஷாக்கான ரசிகர்கள்...!

Karthik Rohini
By Nandhini Dec 27, 2022 02:04 PM GMT
Report

சரக்கடித்துவிட்டு நடிகர் கார்த்திக் செய்த செயலால் மனைவி ரோகினி பதறி அடித்து ஓடி வந்த தகவல் தற்போது தீயாய் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் கார்த்திக்

இயக்குநர் பாரதிராஜா இயக்கிய ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். இவர் 1980-90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய்., அஜித் ஆகியவர்களின் படங்களுக்கு கூட கார்த்திக் படங்கள் கடுமையான போட்டி போட்டது. இந்நிலையில், நடிகர் கார்த்திக் குறித்து சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

சரக்கடித்துவிட்டு நடிகர் கார்த்திக் செய்த செயல்

அதாவது, சினிமாவில் நடிப்பவர்களுக்கு சிலருக்கு படப்பிடிப்பு முடிந்துவிட்டால் ஜாலியாக நண்பர்கள் அல்லது படப்பிடிப்பு குழுவினருடன் மது அருந்தும் பழக்கம் உள்ளது. தனியாக கூட சிலர் மது அருந்துவார்கள்.

முன்னணி ஹீரோவாக வலம் வந்த கார்த்திக்கு ஒரே ஒரு பிரச்சனை இருக்கிறது. அது என்னவென்றால், படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார். மதுப்பழக்கம் உள்ள நடிகர் கார்த்திக் விடிய விடிய மது அருந்திவிட்டு, பகலில் நன்றாக தூங்கும் பழக்கம் கொண்டவர். படப்பிடிப்பு காலை 7 மணிக்கு துவங்கும். இவர் மதியம் 2 மணிக்குதான் படப்பிடிப்புக்கே வருவாராம்.

actor-karthik-rohini

பதறி ஓடி வந்த மனைவி

ஒருமுறை ஊட்டியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, நல்லா மது அருந்துவிட்டு கார்த்திக் தூங்கிவிட்டாராம். உள்ளே போய் கதவை சாத்தியவர் திறக்கவே இல்லை.

இதனால், படப்பிடிப்பு குழுவினரும், இயக்குனரும் என யார் தட்டியும் அவர் கதவை திறக்கவே இல்லை. இதனால், பயந்து போன படக்குழுவினர் சென்னையில் இருந்த அவரின் மனைவிக்கு போன் செய்து தகவல் கொடுத்தனர்.

பதறிப்போன மனைவி ரோகினி சென்னையிலிருந்து ஊட்டிக்கு விரைந்து வந்தார். பின்னர், ரோகினி சத்தம்போட்டு, கதவை தட்டிய பிறகே கார்த்திக் எழுந்து வந்து கதவை திறந்தாராம். இதனால், சில மணி நேரம் கழித்து படப்பிடிப்புக்கு கிளம்பி வந்தாராம் கார்த்திக்.