சுசித்ரா சொன்னது பொய், மன்னிப்பு கேட்க வேண்டும்- முன்னாள் கணவர் கார்த்திக் நோட்டீஸ்!
பாடகி சுசித்ராவுக்கு அவரது முன்னாள் கணவர் கார்த்திக் மன்னிப்பு கேட்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சுசித்ரா
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வளம் வந்தவர் சுசித்ரா. இவர் தனது தனித்துவமான குரலால் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். சுசித்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ‛சுச்சி லீக்ஸ்' விவகாரத்தில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து சுசித்ராவின் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் அவரை விவாகரத்து செய்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில் சுசித்ரா அளித்த பேட்டி ஒன்று தமிழ் சினிமா வட்டாரத்தில் மீண்டும் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், பல பிரபலங்களை குறித்து தாறுமாறாக அவர் விமர்சித்துள்ளார்.
கார்த்திக்
மேலும், தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறி அதிரவைத்தார். இந்த நிலையில், தன்னைப் பற்றி பொய்யான கருத்து கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாடகியும், முன்னாள் மனைவியுமான சுசித்ராவுக்கு நடிகர் கார்த்திக் குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், பொய்யான கருத்து கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் சுசித்ராவின் கருத்துகள் பொய்யானவை உறுதிப்படுத்தாமல் நேர்காணலை வெளியிட்டுள்ளனர் சம்பந்தப்பட்ட நேர்காணலை தனியார் யூடியூப் சேனல் நிர்வாகம் நீக்க வேண்டும், இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் கார்த்திக் குமார் தெரிவித்துள்ளார்.