நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல நடிகர் கார்த்திக் உடற்பயிற்சி செய்த போது தவிறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் உருவான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். 1980 - 1990களில் முன்னணி கதாநாயகனாக தமிழ் திரையுலகை கலக்கி வந்தார்.

ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைவருக்கும் கடுமையான போட்டியாளராக வலம் வந்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் தினமும் அவர் உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
அந்த வகையில், நேற்று தனது வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்துள்ளார். இதனால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே விபத்தில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்த அதே இடத்தில் மீண்டும் அடிப்பட்டு உள்ளதால், கால் எலும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நடிகர் கார்த்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.