நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி: காரணம் என்ன?
உடல்நலக்குறைவால் நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் கார்த்திக். காமெடி, ரொமான்ஸ் என நவரச நாயகன் என்று அழைக்கப்பட்ட இவர் சினிமா டூ அரசியல் என இருந்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டு நாடாளும் மக்கள் கட்சிக்கு பதில் மனித உரிமை காக்கும் கட்சியை கார்த்திக் தொடங்கினார்.
வருகிற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு கார்த்திக் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் கார்த்திக் கட்சிக்கு 2 சீட்டுகள் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் அதை வைத்துக் கொண்டு எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்பதால் அதை மறுத்துவிட்டேன் எனவும் கூறியிருந்தார்.
அத்துடன் நடிகை குஷ்புவிற்கு ஆதரவு கொடுத்த இவர், ஆயிரம் விளக்குத் தொகுதியில் வேட்பாளர் குஷ்புவிற்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் நடிகர் கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டிருந்த அவருக்கு திடீர் உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளது அவரது குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.