நடிகர் கார்த்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

hospital cinema actor Karthik
By Jon Apr 05, 2021 07:40 PM GMT
Report

நடிகர் கார்த்தி உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் கார்த்திக்கிற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 21ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவமனையில் கார்த்திக் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கார்த்திக்கை ஓய்வெடுக்கச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், அவர் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு பின்னர் சென்னை திரும்பிய கார்த்திக்கிற்கு இன்று மாலை திடீரென மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். உயர் ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Gallery