விஜய் அரசியலுக்கு வருவதில் சந்தோஷம்; ஆனால் எனது விருப்பம்.. - நடிகர் கார்த்திக்
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகர் கார்த்திக் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து கட்சிக்காக பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை. அதே நேரத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்று விஜய் அறிவித்தார்.

மேலும், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலியையும் அறிமுகம் செய்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து மனித உரிமைக் காக்கும் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் பேசியுள்ளார்.
எனக்கு சந்தோஷம்
அவர் கூறியதாவது "விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் அரசியலுக்கு வருவதில் எனக்கு சந்தோஷம். மக்களும் அவரின் இந்த முடிவுக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். நடிப்பதைவிட்டுவிட்டு முழுமையாக அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த முடிவை சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது அவர் எடுத்துள்ளார். எனது விருப்பம் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால், படத்தில் நடிப்பது மூலம் அவர் தனது கோரிக்கைகளையும் யோசனைகளையும் மக்களுக்கு எளிதாக தெரிவிக்கலாம்" என்றார்.
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan