மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம்..!

Karthi Suriya Yuvan Shankar Raja Soori
By Thahir Aug 04, 2022 04:38 AM GMT
Report

நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.

நடிகர் கார்த்தி சாமி தரிசனம் 

இந்த படத்தில் அவரது சகோதரர் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்த விழாவில் அதிதி சங்கர்,கருணாஸ், சூர்யா,யுவன் சங்கர் ராஜா, வடிவுகரசி, நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Karthi

இந்த நிலையில் இன்று காலை மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற நடிகர் கார்த்தி சாமி தரிசனம் செய்தார்.