வெளியானது நடிகர் கார்த்தியின் “விருமன்” பட First லுக் போஸ்டர்

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'விருமன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

கொம்பன் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குனர் முத்தையா உடன் 'விருமன்' படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார்.

இந்த படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டைன்மெண்ட் தயாரிக்கிறது. கொம்பன் படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு விருமன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கிராமத்து இளைஞனாக கையில் ஈட்டியுடன் கார்த்தி மிரட்டலாக காணப்படுகிறார்.

பருத்திவீரன், கொம்பன் படங்களின் பார்த்த கார்த்தியை மீண்டும் ஒருமுறை திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்