மீண்டும் இணையும் “கொம்பன்” கூட்டணி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

actor karthi komban director muthaiah
By Petchi Avudaiappan Aug 09, 2021 12:55 PM GMT
Report

 நடிகர் கார்த்தி - இயக்குநர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைய உள்ள படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான “கொம்பன்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

கிட்டதட்ட தொடர் தோல்விகளை சந்தித்து வந்த கார்த்திக்கு இப்படம் முக்கியமான ஒன்றாக அமைந்தது. இதனிடையே சுல்தான் படத்திற்கு பிறகு கார்த்தி பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் இன்னும் 30 நாட்களில் பொன்னியின் செல்வன் முழு படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் முத்தையா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சர்தார் படத்திற்கு முன்பாகவே தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.