சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை தொடர்ந்து ‘சர்தார்’ மூலம் மீண்டும் மிரட்ட வரும் கார்த்தி..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

Swetha Subash
in திரைப்படம்Report this article
நடிகர் கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடைசியாக கடந்தாண்டு சுல்தான் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு, சர்தார் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்த படத்தில் கார்த்தி சிறைக்கு பின்னால் முதியவர் தோரணையில் இருந்த ஸ்டில் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.
நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன், விருமன், கைதி 2 படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருந்ததால், அந்த படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.
இதனால், சர்தார் படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சர்தார் படத்தில் நடிகர் கார்த்தி இரண்டு தோற்றத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பி.எஸ். மித்ரன் இயக்கும் இந்த படத்தில் சிறையில் உள்ள முதியவராக ஒரு தோற்றத்திலும், காவல்துறை அதிகாரியாக மற்றொரு தோற்றத்திலும் நடிக்கிறார்.
இதுதொடர்பாக, படத்தின் இயக்குனர் பி.எஸ். மித்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பதிவும் இதை உறுதி செய்கிறது.
காவல்துறை கெட்டப்பில் மிடுக்காக உள்ள கார்த்தியிடம் இயக்குனர் மித்ரன் காட்சியை விளக்குவது போல இந்த வீடியோ உள்ளது. மேலும், இந்த வீடியோவிற்கு மேலே படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது மிகவும் அற்புதமாக இருந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.
Shoot resumes with the very-amazing @Karthi_Offl #Sardar pic.twitter.com/GJwcF0u6G0
— PS Mithran (@Psmithran) January 6, 2022
நடிகர் கார்த்திக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திரைப்படங்கள் அனைத்தும் இதுவரை மெகாஹிட் ஆகியுள்ளது.
ரத்னவேல் பாண்டியனாக நடித்த சிறுத்தை, தீரனாக நடித்த தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் கார்த்தியின் திரை வாழ்க்கையில் முக்கியமான வெற்றிப்படங்கள் ஆகும்.
இந்த வரிசையில் தற்போது சர்தார் படத்திலும் கார்த்தி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.