நான் தற்கொலை செய்யலாம்னு நினைத்தேன்.. கல்லூரியில் கமல்ஹாசன் பேச்சு - இணையத்தில் வைரல்!
நடிகர் கமல்ஹாசன் தான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
கமல்ஹாசன்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர் உலகநாயகன். இவர் பல கதாபாத்திரங்களில் பன்முகங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர். இவர் திற்பொழுது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இவர் 90sகளில் நடித்த எல்லோருக்கும் பிடித்த நடிகர் ஆவார். அந்த சமயங்களில் இவர் நடிகை சிம்ரனுடன் இனைந்து பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் பேச்சு
இந்நிலையில், லயோலா கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், சமீபத்தில் இசையமைப்பாளரின் மகள் தற்கொலை செய்துகொண்டது வேதனையை கொடுத்தது என்று கூறினார். தொடர்ந்து, "சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், இளைஞன் ஆன பின்னர் 20 வயது 21 வயது இருக்கும் போது சினிமாவே என்னை ஒதுக்கியது போல இருந்தது.
அப்போது எனக்கும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்கிற எண்ணம் தோன்றியது. ஆனால், என்ன ஆகுதுன்னு பாத்துடலாம்னு ஒரு குருட்டு தைரியத்தி்ல் கடைசிவரை முயற்சி செய்ய முடிவெடுத்தேன் இப்போ உங்கள் முன் கமல்ஹாசனாக நிற்கிறேன்.
மரணம் அனைவரும் வாழ்விலும் ஒரு அங்கம். அது வரும் போது வரட்டும். நாமாக அவசரப்பட்டு விடக்கூடாது. தற்கொலை எண்ணத்தை தாண்டி வாழ்ந்தவர்கள் பலர் சாதனையாளர்களாக உள்ளனர்" என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.