நடிகர் கமல்ஹாசன் விரைவில் வீடு திரும்புவார் - கவிஞர் வைரமுத்து தகவல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்ததாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கம்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கலைஞானி கமல்ஹாசனைத் தொலைபேசியில் அழைத்து நலம் கேட்டேன். நடந்தவை - நடப்பவை சொன்னார். குணம்பெற வாழ்த்தினேன். கட்டுறுதி மிக்க உடல்; கல்லுறுதி மிக்க மனம்; மருத்துவ மகத்துவம் வேறென்ன வேண்டும்? விரைவில் வீடு திரும்புவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலைஞானி கமல்ஹாசனைத்
— வைரமுத்து (@Vairamuthu) November 23, 2021
தொலைபேசியில் அழைத்து
நலம் கேட்டேன்
நடந்தவை - நடப்பவை சொன்னார்
குணம்பெற வாழ்த்தினேன்
கட்டுறுதி மிக்கஉடல்
கல்லுறுதி மிக்கமனம்
மருத்துவ மகத்துவம்
வேறென்ன வேண்டும்?
விரைவில்
வீடு திரும்புவார்.@ikamalhaasan