சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல் : கமல்ஹாசன்

Kamal Haasan
By Irumporai Feb 14, 2023 09:54 AM GMT
Report

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது , இந்த நிலையில் நடிகர் கமல் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினத்தை என பதிவிட்டுள்ளார்.