நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக கமல்ஹாசன் பொறுப்பேற்பு

Kamal Haasan Karthik Nassar
By Nandhini May 02, 2022 11:28 AM GMT
Report

கடந்த 2020ம் ஆண்டு நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாண்டவர் அணியில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பூச்சிமுருகன் ஆகியோர் போட்டியிட்டார்கள்.

சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த், குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிட்டார்கள். ஆனால், இத்தேர்தல் நீதிமன்ற தடை காரணமாக 2 ஆண்டுகளாக வாக்கு எண்ணிக்கை எதுவும் நடக்கவில்லை.

இதனையடுத்து, நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இத்தேர்தலில், பாக்யராஜ் 1054 வாக்குகள் பெற்றார். நாசர் 1701 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவரானார்.

பொதுச்செயலாளராக மீண்டும் நடிகர் விஷால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பொருளாளராக நடிகர் கார்த்தி தேர்வாகி இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காலர் குழு உறுப்பினராக நடிகர் கமல்ஹாசன் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இவருக்கு நடிகர்கள் நாசர், கார்த்திக், கஞ்சா கறுப்பு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக கமல்ஹாசன் பொறுப்பேற்பு | Actor Kamalhaasan Nassar Karthik