தனது மகள்களுடன் வாக்களித்தார் நடிகர் கமல்ஹாசன்

kamal vote akshara shurthi
By Jon Apr 06, 2021 02:18 PM GMT
Report

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார். அவருடன் அவரது மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அகஷராஹாசன் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.