உயிர் நீத்தவர்களுக்கும் ஒரு சமர்ப்பணம் -அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன் !

Kamal Haasan Sivakarthikeyan K. Annamalai Amaran
By Vidhya Senthil Nov 04, 2024 06:15 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in அரசியல்
Report

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

 அண்ணாமலை

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்துள்ள படம் அமரன். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சாய் பல்லவி நடித்துள்ளார்.

Actor Kamal Haasan thanked Tamil Nadu BJP president Annamalai

இந்த படம் இந்திய ராணுவ வீரர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது . மேலும் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் அமரன் திரைப்படத்தைத் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்த்துள்ளார். இது குறித்துப் பதிவிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், அமரன் படம் பார்க்க நேர்ந்தது.

இது பல அம்சங்களில் மிக முக்கியமான திரைப்படம். சீருடையில் இருக்கும் நமது வீரர்களின் வீரம், துணிச்சல் மற்றும் நேர்மை அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டின் மிகச்சிறந்த வீரர்கள், எஞ்சியுள்ள நம்மைப் பாதுகாக்கும் பொருட்டு தங்களை தாங்களே தியாகம் செய்யும்போது ஒரு குடும்பம் அளிக்கும் விலை என்ன என்பது படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

இந்தி கட்டாயம் என்பதுதான் திராவிட மாடலா ? சீமான் கேள்வி

இந்தி கட்டாயம் என்பதுதான் திராவிட மாடலா ? சீமான் கேள்வி

ஏன் நம் அனைவரையும் விட ஒரு சிலர் எப்போதும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களாக உள்ளனர். ஏனெனில், அவர்கள் தங்களது சீருடையை அணிந்து கொண்டு விருப்பத்துடன் ஆபத்தை நோக்கிச் செல்கின்றனர். உணர்வுபூர்வமான துயரத்தையும் வலியையும் ஒரு ராணுவ வீரனின் குடும்பம் பெருமையுடன் சுமக்கிறது.

கமல்ஹாசன் 

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பல யுகங்களுக்கு ஊக்கம் தரும் கதையாக இருக்கும். 2014-ல் நம் நாட்டுக்காக அவர் செய்த உச்சபட்ச தியாகம், நமக்குள் நாம் எதையோ ஒன்றை இழந்துவிட்ட உணர்வை நமக்கு தந்தது. நான் என்னுடைய காக்கி சீருடையில் இருந்த அந்த காலகட்டத்தில் உணர்ச்சிகர தருணங்கள் எனக்கு துல்லியமாக நினைவில் உள்ளன.

ராஜ்குமார் பெரியசாமியின் அருமையான இயக்கம் நடிப்பு, சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் அற்புதமான நடிப்பு, வேறு யாராலும் செய்திருக்க முடியாத சாய் பல்லவியின் கதாபாத்திரம், விறுவிறுப்பான இசை மற்றும் கேமரா. இந்த படத்தை தயாரித்த கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி. இப்படம் சீருடையில் சேவை செய்யும் அனைவருக்கும், 

உயிர் நீத்தவர்களுக்கும் ஒரு சமர்ப்பணம் என்று கருதுகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார். இதற்குத் தமிழக பாஜக தலைவர், தம்பி அண்ணாமலை அவர்கள் அமரன் திரைப்படம் அவருக்கு ஏற்படுத்திய உணர்வலைகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.