ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு
ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கடந்த 4ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா காலமானார். இதனிடையே இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் அண்மையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆறுதல் கோரியிருந்தனர்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு கமல்ஹாசன் ஆதரவு
இதையடுத்து தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலேசானை நடத்திய கமல்ஹாசன். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிக்கு உதவுவோம் என அறிவித்துள்ளார்.

அவசரநிலை கருதி எதிர்வாத சக்திகளுக்கு உதவ வேண்டாம் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிடிக்காத கட்சி என்றாலும் தேச நலனுக்காக அவர்களுடன் ஒரே மேடையில் அமரவும் தயார் என அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் இப்போது அதுபற்றி தெரிவிக்க இயலாது என தெரிவித்துள்ளார்.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil