பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல் - இனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார்?

Ramyakrishnan bbultimate actorkamalhaasan bigbossultimate
By Petchi Avudaiappan Feb 21, 2022 05:05 PM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகியுள்ள நிலையில் அடுத்ததாக தொகுத்து வழங்குபவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து ஓடிடி தளத்திற்காக பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி 24 மணி நேரமும் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 

 

இதில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வாரூணி ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த வாரம் நிகழ்ந்த டபுள் எவிக்‌ஷன் முறையில் ஷாரிக், அபிநய் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். 

இதனிடையே பிக்பாஸ்‌ அல்டிமேட்‌ மற்றும்‌ விக்ரம்‌ இரண்டையும்‌ ஒரே நேரத்தில்‌ மேற்கொள்ள முடியாத சூழல்‌ உருவாகிவிட்டதால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில் அடுத்ததாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல் - இனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார்? | Actor Kamal Haasan Quits Big Boss Show

இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்றால் கமல் பாதிக்கப்பட்டதால் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனால் அவரே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.