மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவியேற்றார் கமல்ஹாசன்

Kamal Haasan
By Yashini Jul 25, 2025 07:33 AM GMT
Report

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையின் உறுப்பினராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

தமிழில் பதவிப்பிரமாணம்...

மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவியேற்றார் கமல்ஹாசன் | Actor Kamal Haasan Marks Parliament Debut

தமிழகத்தில் இருந்த மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவை சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் காலியான இடங்களுக்கான தேர்தல் யூன் மாதம் நடத்தப்பட்டது. அதில் திமுக, அதிமுக சார்பில் முன்னிறுத்தப்பட்ட 6 போட்டியாளர்களும் போட்டியின்றி தேர்வாகினர்.

இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று தமிழில் பதவியேற்றுக்கொண்டார், திமுகவின் பி.வில்சன், கவிஞர் ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும் தமிழ் மொழியில் பதவியேற்றுக்கொண்டனர்.