காந்தியை போல மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டீர்கள் - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு கமல் வாழ்த்து!

Kamal Haasan Indian National Congress
By Vinothini May 13, 2023 02:34 PM GMT
Report

கர்நாடக தேர்தலில் வெற்றிப்பெற்றதற்கு கமல்ஹாசன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தல்

கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ள நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

actor-kamal-haasan-greeted-cogress-raghulgandhi

பிற்பகல் 3 மணி நிலவரப்படி காங்கிரஸ் 137 இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி காங்கிரஸ் 137 இடங்களிலும், பாஜக 63 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கமல் வாழ்த்து

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “முக்கியத்துவம் வாய்ந்த கர்நாடக தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துகள் ராகுல்.

காந்தியைப்போல நீங்கள் உங்கள் வழியில் பயணித்து மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறீர்கள்.

அவரைப்போலவே மென்மையான வழியில் அன்பு, பணிவுடன் உலகின் சக்தியை அசைக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளீர்கள்.

உங்களின் நம்பகத்தன்மை வாய்ந்த அணுகுமுறையால் மக்களால் புதிய காற்றை சுவாசிக்க முடிந்துள்ளது.

பிரிவினையை நிராகரிக்க கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்துள்ளனர். வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றியின் விதத்திற்கும் பாராட்டுக்கள்” என பதிவிட்டுள்ளார்.