மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல் வீடு திரும்பினார்

Kamal Haasan Tamil Cinema
By Thahir 5 நாட்கள் முன்

காய்ச்சல் காரணமாக நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வீடு திரும்பினார்.

வீடு திரும்பினார் நடிகர் கமல் 

நேற்று முன்தினம் நடிகர் கமல் லேசான காய்ச்சல் மற்றும் சளி காரணமாக போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

3 தினங்களுக்கு முன் ஹைதராபாத் சென்ற நடிகர் கமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் பின்னர் சென்னை திரும்பிய நிலையில், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல் வீடு திரும்பினார் | Actor Kamal Haasan Discharge

அவரின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு லேசான காய்ச்சல், சளி இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பூரண குணமடைந்த நிலையில் கமல் வீடு திரும்பியுள்ளார். அவரை மருத்துவர்கள் ஒரீரு நாட்கள் ஓய்வில் இருக்குமாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.