கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகர் கமல்ஹாசன்
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில் மார்ச் மாதம் முதல் 60 வயது கடந்த முதியவர்களுக்கும் நோயாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 செலுத்தியும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்து.
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள். pic.twitter.com/SmZEUr4qqT
— Kamal Haasan (@ikamalhaasan) March 2, 2021
இதனைத் தொடர்ந்து பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை பலரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். தற்போது நடிகர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிரபலங்களில் நடிகர் கமல்ஹாசன் முதல் இடத்தில் உள்ளார்.
பிரபலங்கள், அரசியல்வாதிகள் வெளிப்படையாக பொது வெளியில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வது மக்கள் மத்தியில் தடுப்பூசி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.