புற்றுநோயால் அவதிப்படும் தீவிர ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் கமல் - கண்கலங்கிய தருணம்!
மூளை புற்றுநோயுடன் போராடி வரும் ரசிகர் ஒருவரின் கோரிக்கையை ஏற்று வீடியோ கால் மூலம் அவருடன் பேசி மகிழ்வித்திருக்கிறார் கமல் ஹாசன். அதை பார்த்த ரசிகர்கள் பலர் கமலை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகவே உள்ளனர்.

இந்த நிலையில் சாகெத் என்ற கமலின் தீவிர ரசிகர் மூளை புற்றுநோயால் அவதியுற்று வருகிறார். நோயை எதிர்த்து உயிருடன் போராடும் அவர் நடிகர் கமலுடன் பேச விரும்பியுள்ளார்.
இதனை அறிந்த நடிகர் கமல் ஜூம் கால் மூலம் சாகெத் மற்றும் அவரது குடும்பத்தினரோடு பேசி அவர்களை மகிழ்வித்துள்ளார்.

கண் கலங்கிய படி தன் இரண்டு குழந்தைகளையும் நடிகர் கமலுக்கு சாகெத் ஜூம் கால் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து நடிகர் கமல் புற்றுநோயால் தவிக்கும் சாகெத்தை ஊக்குவிக்கும் வகையில் பேசியுள்ளார்.
இதனால் மனம் குளிர்ந்த சாகெத், தான் கமலுடன் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார். இதனை கண்ட கமலின் ரசிகர்கள் பலரும் நடிகர் கமலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Saketh has brain cancer stage 3 and is such a fighter we are all so proud of him.. please pray for him ❤️❤️❤️#KamalHaasan pic.twitter.com/KR4P7YQtxN
— Kamal Haasan Fans (@ikamalhaasanfan) June 22, 2021
எத்தனை வேலை
இருந்தாலும் ரசிகர் ஒருவரின் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் எங்கள் ஆண்டவர் என கமல் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.