நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் திடீர் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி

corona cinema bigboss admitted to hospital actor kamal fans shock
By Nandhini Jan 17, 2022 08:31 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் தமிழ் துறையில் மட்டுமல்லாமல், அரசியல், சின்னத்திரை நிகழ்ச்சி அனைத்திலும் பிஸியாக இருப்பவர்.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா சென்று வந்த நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் கமல்.

2 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார்.

வீடு திரும்பிய கையோடு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவ்வப்போது அமர்ந்தே நிகழ்ச்சியை நடத்தி வந்தார் நடிகர் கமல்.

கடந்த சனிக்கிழமையுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதன் இறுதி எபிசோட் நேற்று ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவர் பொது உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் திடீர் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி | Actor Kamal Admitted To Hospital Fans Shock