பிரம்மாண்டமாக நடந்த நடிகர் காளிதாஸ் ஜெயராம் நிச்சயதார்த்தம் - பெண் யார் தெரியுமா?

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகர் காளிதாஸ் ஜெயராம் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் காளிதாஸ் ஜெயராம்
தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் சீனியர் நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம். 7 வயதிலேயே ‘கொச்சு கொச்சு சந்தோஷங்கள்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி விருதையும் வென்றார்.
'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் மலையாளத்தில் பூமரம் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து, இவர் திருநங்கையாக நடித்த 'நவரசா' வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
நிச்சயதார்த்தம்
மேலும், விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் கவனம் பெற்றார். இந்நிலையில், தனது காதலியான பிரபல மாடல் தாரிணி காளிங்கராயர் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இவர் 2019-ம் ஆண்டு ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்றவர். இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#KalidasJayaram locked ? pic.twitter.com/GB9n0dwhUR
— Filmy Monks (@filmy_monks) November 10, 2023