டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து மீது பிரபல நடிகர் கொலை மிரட்டல் புகார்

GP Muthu Actor kadhal sukumar chennai police
By Petchi Avudaiappan Aug 05, 2021 08:22 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

 தனக்கு கொலை மிரட்டல் விடுத்த டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகைச்சுவை நடிகர் 'காதல்' சுகுமார் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

காதல், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் 'காதல்' சுகுமார் சென்னை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து மீது பிரபல நடிகர் கொலை மிரட்டல் புகார் | Actor Kadal Sukumar Complaint Against Gp Muthu

அதில் கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலமாக பள்ளி மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். பள்ளி மாணவர்களை நல்வழி பாதையில் கொண்டு செல்லும்படியான சமூக வலைதளங்களில் இலக்கியா, ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா உட்பட சிலர் ஆபாசங்கள் நிறைந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

இதனை தடுத்து நிறுத்த வேண்டி சமீபத்தில் எனது நண்பரும் சர்வதேச மனித உரிமைகள் கவுன்சிலின் மாநில பொதுச் செயலாளருமான ஏழுமலை, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக நானும் ஊடகங்கள் வாயிலாக பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்தேன்.

இதனால் நெல்லை சங்கர், சேலம் மணி மற்றும் ஜி.பி.முத்து ஆகியோர் தொடர்ந்து சமூக வலைதளம் வாயிலாக எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இவர்கள் மீது உடனடியாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாசங்கள் நிறைந்த இவர்களின் சமூக வலைதள பக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.