நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்!
Death
Tamil Cinema
Actor Gemini Rajeshwari
By Thahir
சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடன நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி. நடனத்திற்கு பேர்போன இவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடனமாடியுள்ளார். தமிழ் சினிமாவின் அந்த காலம் முதல் இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை இவர் சேர்ந்து நடித்துள்ளார்.

கமல் ஹாசனின் 16 வயதினிலே, பாக்யராஜின் சின்ன வீடு ,மண்வாசனை போன்ற படங்களில் நடித்த நடிகை ஜெமினி ராஜேஸ்வரி கடைசியாக வேலைக்காரன், எதிர்நீச்சல், கயல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
வயது மூப்புகாரணமாக பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி இன்று காலமானார் இவரின் இறப்பிற்கு திரைத்துறையில் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.