நட்பில் இருந்து 7 வருட காதல்.. க்யூட் லவ் ஸ்டோரி - நடிகர் ஜீவாவின் மனைவி யார் தெரியுமா?
நடிகர் ஜீவாவின் க்யூட் லவ் ஸ்டோரி பற்றியும் அவரது மனைவி குறித்து பதிவில் பார்க்கலாம்.
நடிகர் ஜீவா
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜீவா, இவர் பலருக்கு பிடித்தமான ஒரு ஹீரோவாக வலம் வருகிறார். அமீர் இயக்கத்தில் வெளியான ராம் படத்தில் ஜீவா நடித்திருந்தார். இந்த படம் அவரின் கெரியரில் பிரேக் த்ரூ படமாக அமைந்தது.
அதை தொடர்ந்து, டிஷ்யூம், ஈ, கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ , நண்பன் , முகமூடி , நீதானே என் பொன் வசந்தம், என்றென்றும் புன்னகை, கலகலப்பு 2 என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2007ம் ஆண்டு சுப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஜீவா தனது 10-வது வயதில் முதன்முறையாக சுப்ரியாவை சந்தித்துள்ளார். இருவருமே ஒரே பள்ளியில் படித்தனர். சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் நண்பர்களாக இருந்த நிலையில் இருவருக்கும் நட்பை தாண்டி ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது.
முதலில் ஜீவா தான் தன்னுடைய காதலை சுப்ரியாவிடம் வெளிப்படுத்தி உள்ளார். சுப்ரியாவுக்கும் ஜீவா மீது காதல் இருந்த நிலையில் உடனே அவரும் காதலை ஏற்றுகொண்டாராம். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் ஜீவா கிராபிக்ஸ் டிசைனிங் படித்தார். பின்னர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
லவ் ஸ்டோரி
மறுபுறம் எம்.பி.ஏ படித்து படித்து முடித்த சுப்ரியா, இண்டீரியர் டிசைனிங் படித்துள்ளார். இருவரும் 7 ஆண்டுகள் காதலர்களாக இருந்துள்ளனர். இதையடுத்து இருவரும் தங்கள் துறையில் ஓரளவு முன்னேறிய பிறகு தங்கள் காதலை வீட்டில் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர்.
அதன்படி, இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2007-ம் ஆண்டு ஜீவா – சுப்ரியா ஜோடி திருமணம் செய்து கொண்டனர். டெல்லியில் திருமணமும், சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு 2010-ம் ஆண்டு ஆண்குழந்தை பிறந்தது. திரைத்துறை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் எந்த சர்ச்சைகளும் இன்றி அமைதியான வாழ்க்கையை நடத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது மனைவி உடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.