எனக்கு ட்ரஸ்சே கொடுக்கல : பொன்னியின் செல்வன் பாடல் நிகழ்ச்சியில் புலம்பிய ஜெயராம்
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் தனக்கு துணியே தரவில்லை என நடிகர் ஜெயராம் பேசியுள்ளார்.
சென்னையில் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்
அப்போது பேசிய ஜெயராம்,இந்த மாதிரி அற்புதமான படத்தில் அதனுடைய ஒரு சின்ன பகுதியாக நான் இருந்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப பெருமை.
பொன்னியின் செல்வன் ஒவ்வொரு தமிழனின் ஆழப்பதிந்த திரைக்கதை. எனக்கு இந்த ட்ரஸ்சே நிகழ்ச்சிக்காக கொடுத்தார்கள். ஆனால் படத்தில் எனக்கு ட்ரஸ்சே கொடுக்கல.
அதனால புரோமோஷனுக்காகவாது ஒன்று கொடுங்கள் என்று வாங்கி வந்தேன். தாய்லாந்தில் 3.30 மணிக்கு ஷூட்டிங் கிளம்பணும். 18 மணி நேரம் ஷூட்டிங் முடிச்சுட்டு வந்தா, அப்பதான் மணிசார் நாளைக்கு பேர் பாடி சீன் இருக்கு என்று சொல்வார். உடனே கார்த்தியும், ரவியும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.” என்று பேசினார்.