பிரபல நடிகரை சிறை பிடித்த ஹோட்டல் நிர்வாகத்தால் பரபரப்பு

Actor Son Arrest House Jayaram
By Thahir Nov 19, 2021 04:42 PM GMT
Report

பிரபல மலையாள நடிகர் ஜெயராம். இவர், பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவருடைய மகன் காளிதாஸ் ஜெயராம்.

தற்போது ஏராளமான வெப் தொடர்களில் நடித்து வருகிறார். அத்துடன், காளிதாஸ் நடித்த 'ஒரு பக்க கதை' என்ற படமும் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில், காளிதாஸ் ஜெயராம் புதிய தமிழ் வெப் தொடரில் நடித்து வருகிறார். இதற்காக மூணாறு சென்றார்.

அங்கு ஒரு சொகுசு விடுதியில் படக்குழுவினருடன் தங்கி இருந்தார். தயாரிப்பு நிறுவனம், தங்கியிருந்த அறை மற்றும் உணவகக் கட்டணத்தை செலுத்தவில்லை.

பிரபல நடிகரை சிறை பிடித்த ஹோட்டல் நிர்வாகத்தால் பரபரப்பு | Actor Jayaram Son House Arrest Munnar

இதற்கிடையே அறை வாடகை, ஹோட்டல் கட்டணம் என்று சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சத்தை தாண்டியது. இந்த பணத்தை கொடுக்காமல் படக்குழுவினர் அறையை காலி செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை வெளியே விடாமல் காளிதாஸ் ஜெயராம் உட்பட படக்குழுவினரை சிறைபிடித்தனர்.

பின்னர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்பின் பில் கட்டணத்தை செலுத்துவதாக கூறி முழு தொகையையும் செலுத்தினர். அதன் பின்னரே ஊழியர்கள் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.