நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்த கேள்வி - நடிகர் ஜெயம் ரவி அளித்த பதில் இதுதான்!

Jayam Ravi Vijay Tamil Cinema Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Jiyath Feb 11, 2024 08:50 AM GMT
Report

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்க நடிகர் ஜெயம் ரவி மறுத்துள்ளார். 

நடிகர் ஜெயம் ரவி

அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 'சைரன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, அழகம் பெருமாள் உட்பட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்த கேள்வி - நடிகர் ஜெயம் ரவி அளித்த பதில் இதுதான்! | Actor Jayam Ravi About Vijays Political Party

சைரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, அவரது மனைவியுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

ஒரே ஒரு வார்த்தை.. கேரள சிறுமியை அழ வைத்த த.வெ.க தலைவர் விஜய் - வைரலாகும் Video!

ஒரே ஒரு வார்த்தை.. கேரள சிறுமியை அழ வைத்த த.வெ.க தலைவர் விஜய் - வைரலாகும் Video!

பேட்டி 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி "நான் நடிக்கும் படம் பற்றி ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன்" என்று கூறினார்.

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்த கேள்வி - நடிகர் ஜெயம் ரவி அளித்த பதில் இதுதான்! | Actor Jayam Ravi About Vijays Political Party

முன்னதாக இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்க வேண்டாம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.